அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து பொதுமக்கள் அதிகளவில் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், சேலம், சென்னை, கோவை, ஜெயங்கொண்டம், கும்பகோணம் என பல்வேறு வெளியூர்களுக்கு பஸ்கள் மூலம் சென்று வருகின்றனர். மேற்படி அரியலூர் பஸ் நிலையம் சிதிலமடைந்ததை கருத்தில் கொண்டு புதிய பஸ் நிலையம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்த பஸ் நிலையம் இடிக்கப்பட்டது. ஆனால் அங்கு புதிய பஸ் நிலையம் இதுவரை அமைக்கப்படவில்லை. தினமும் பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் வெயிலில் நீண்ட நேரம் நின்று வெளியூர் சென்று வருகின்றனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி கிராம புற மாணவர்கள், மாணவிகள் வீடுகளுக்கு செல்வதற்கு நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் போது சில சமயங்களில் மழை பெய்வதால் மழையில் நனைந்தபடியே நீண்ட நேரம் நனைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.