ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி புதிய பஸ் நிலையம் பகுதியில் ஏராளமான வாகனஓட்டிகள் பயணிக்கின்றனர். இவர்கள் தங்கள் வாகனங்களை நிறத்துவதற்கு தகுந்த இடவசதி இல்லாமல் அவதியடைகின்றனர். வாகனஓட்டிகள் சிலர் வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன காப்பகம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.