கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து கிளப் ரோடு செல்லும் குறுகிய சாலையோரத்தில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் விபத்து ஏற்படும் அபயாம் உள்ளது. எனவே சாலையோரத்தில் கட்டிட கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.