திருவாரூர் நகரப்பகுதியில் ஏராளமான பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த பஸ் நிறுத்தங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்கின்றன. ஆனால் பஸ்கள் நிறுத்தங்களில் நிற்காமல் சற்று தொலைவில் நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறி நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக நிறுத்தங்களில் பஸ்கள் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.