நீடாமங்கலத்தில் அண்ணா சிலை, மேலராஜவீதி, ரயில் நிலையம் அருகில் என 3இடங்களில் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த பஸ் நிறுத்தங்களின் மூலம் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும்பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வயதானவர்கள், பெண்கள் அமர்வதற்கு கூட வசதி இல்லை. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி அண்ணா சிலை, மேலராஜவீதி, ரயில் நிலையம் அருகில் ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?