குறித்த நேரத்தில் பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-11-06 15:58 GMT
கோத்தகிரியில் இருந்து இடுக்கொரை கிராமத்திற்கு மாலை 5.30 மணிக்கு இயக்க வேண்டிய அரசு பஸ் குறித்த நேரத்தில் இயக்கப்படாமல் தாமதமாக இயக்கப்படுகிறது. எனவே இந்த பஸ் மூலம் வீட்டிற்கு செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் இரவு நேரத்தில் தான் சென்று சேர முடிகிறது. சிறுத்தை, கரடி, காட்டெருமை நடமாட்டம் உள்ள கிராமத்திற்கு பள்ளிக் குழந்தைகள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளதால் குறித்த நேரத்தில் அரசு பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்