கிருஷ்ணகிரி நகரின் முக்கிய சாலைகள் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த டவுன் பஸ்கள் இந்த பகுதிகளில் உள்ள குறுகலான சாலைகளில் நீண்ட நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கிறார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள் பஸ்களை நிறுத்தி உடனடியாக புறப்பட்டு செல்ல போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும்.