சிவகாசி பஸ் நிலையம் அருகே காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பண்டிகை காலம் என்பதால் சாலையில் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. மிகுந்த சிரமத்திற்கு இடையே வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்கின்றனர். எனவே வாகனஓட்டிகளின் நலன் கருதி பண்டிகை கால நெரிசலை கட்டுப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.