ராமநாதபுரம் பாரதி நகர் கிழக்கு கடற்கரை சாலையும், ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கும் ஈ.சி.ஆர். சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ரவுண்டானா இல்லை. சிக்னல் விளக்குகளும் இல்லை. இதன் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த வழிதடத்தில் மேம்பாலம் அமைத்து போக்குவரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.