கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-07-15 18:43 GMT

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாலை வேளை வகுப்பில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் கல்லூரி முடிந்து கிழக்கு புதுச்சேரி சாலை மாதா கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்லவும் குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் சாலையின் இருபுறமும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே இதை தவிர்க்க மாதா கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்ல மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்