சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து மதுரைக்கு மதிய வேளைகளில் குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. காத்திருந்து பயணிப்பதால் பொதுமக்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.