பழனி நகரில் காலை மற்றும் மாலை வேளையில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் அதி வேகமாக செல்கிறது. அதேபோல் மாலை நேரங்களில் கிரிவீதிகளிலும் ஆட்டோக்கள் வேகமாக ஓட்டி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள், குழந்தைகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.