நாகை, நாகூர் மெயின் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன இவை இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன இதன்காரணமாக வாகனங்களில் வருபவர்கள் கால்நடைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கால்நடைகள் சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களையும் கீழே தள்ளிவிடுகின்றன. இவற்றால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?