திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து கிராமப்பகுதிகளுக்கு செல்ல காலை, மாலை நேரங்களில் குறைவான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் அந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்சில் எப்போதும் கூட்டநெரிசல் அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக மாணவ-மாணவிகள் தினமும் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்று வருகின்றனர். குறிப்பாக பஸ்சின் பின்பகுதியில் உள்ள கம்பியில் ஏறி நின்றபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனை பார்க்கும் பொதுமக்கள், பெற்றோர்கள் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?