தமிழகத்தில் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா வாகனங்கள் நீலகிரி மாவட்டத்திற்கு கோத்தகிரி வழியாக வருகின்றன. இவ்வாறு வரும் சுற்றுலா வாகனங்கள் கோத்தகிரி நகர் பகுதியில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு பொருட்களை வாங்கி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே வாகனங்களை முறையாக நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.