நாகை மாவட்டம் திட்டச்சோி, திருமருகல், திருப்புகலூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் நாகை பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் கூட்டநெரிசல் அதிகளவில் இருந்து வருகிறது. இதன்காரணமாக படிகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?