அந்தியூரில் இருந்து கவுந்தபாடி, ஈரோடு வழியாக திருச்செங்கோட்டுக்கு ஒரு தனியார் பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா நோய் பரவல் அதிகரித்து இருக்கும்போது நிறுத்தப்பட்ட அந்த பஸ் அதற்கு பிறகு இயக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் பஸ் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்தியூரில் இருந்து கவுந்தப்பாடி, ஈரோடு வழியாக திருச்செங்கோட்டுக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும்.