போக்குவரத்து நெரிசல்

Update: 2022-10-01 14:40 GMT

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்களது வாகனங்களை சூட்டிங் மட்டம், பைன்பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அருகே சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதே நிலைதான், பிங்கர்போஸ்ட் அருகே ரோகிணி சந்திப்பு பகுதியில் நிகழ்கிறது. ஆனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய போலீசாரும் பணியில் இல்லை. எனவே இந்த பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்