கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றி உள்ள கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த டவுன் பஸ்கள் சென்னை, பெங்களூரு, ராயக்கோட்டை சாலைகளில் பயணிகளை ஏற்றுவதற்காக நீண்ட நேரம் நிறுத்துகிறார்கள். இதனால் குறுகலான சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் வேகமாக செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.