நாகை மாவட்டம் திட்டச்சேரி-தேவன்குடி இடையே ஆற்றங்கரை இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தேவன்குடி,மத்தியக்குடி,நாட்டார்மங்கலம், எரவாஞ்சேரி, உத்தூர், துறையூர், குத்தாலம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆற்றங்கரை இணைப்பு சாலையோரத்தில் அதிகளவில் கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. குறிப்பாக கருவேல மரங்களின் கிளைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை முழுவதும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றங்கரை இணைப்பு சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?