சேதமடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-30 13:36 GMT

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த வீராணம் ஊராட்சியில் படப்பக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கீழத்தெருவிற்கு செல்லும் சாலையின் குறுக்காக வாய்க்கால் பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பாலத்தின் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்