தாராபரம் பூக்கடை கார்னர் வழியாக ஜவுளிக்கடை வீதி, டி.எஸ்.கார்னர், அரசமரம், காமராஜபுரம், தர்கா சுங்கம் வழியாக செல்லும் பஸ்கள் தடம் எண் 25, 6, 7, 12, 10ஏ, 8, 16ஆகிய பஸ்கள் தாராபுரம் டவுனுக்குள் வருவது இல்லை. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான இலவச பயணத்தையும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனவே டவுன் பஸ்கள் தாராபுரம் டவுனுக்குள் வர போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.