கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு ஓட்டல் எதிரில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை சாலையில் இருந்து கிருஷ்ணகிரி நகருக்குள் வரக்கூடிய இரு சக்கர வாகனங்கள் ஆபத்தான முறையில் விதியைமீறி சாலையை கடந்து செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. எனவே போக்குவரத்து விதியை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.