விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி, இனாம் கரிசல்குளத்தில் உள்ள ரெயில்வே கேட் பராமரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாகனஓட்டிகளை மாற்றுவழியில் செல்ல அறிவுறுத்தும் பலகை ஏதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் சிரமப்படுகிறார்கள். ஆதலால் மேற்கண்ட பகுதியில் அறிவிப்பு பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.