ஆபத்தான பயணிகள் நிழற்குடை

Update: 2022-09-27 13:20 GMT

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ளது நாகமங்கலம் கிராமம். இங்குள்ள மாதா கோவில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் இந்த பயணிகள் நிழற்குடையில் நிற்கும் போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்