கோவை சிறுவாணி மெயின்ரோடு இருட்டு பள்ளம் கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. மேலும் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் அச்சப்படுகின்றனர். இது தவிர போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்துகள் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.