பஸ் படியில் ஆபத்தான பயணம்

Update: 2022-09-24 12:50 GMT

நாகை மாவட்டம் நாகூரில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. மேலும் இங்கிருந்து பல்வேறு பணிகளுக்காக திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் திருவாரூரில் இருந்து நாகூருக்கும், நாகூரில் இருந்து திருவாரூருக்கும் பொதுமக்கள்அடிக்கடி சென்று வருகின்றனர். ஆனால் இந்த வழித்தடத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ் படிகளில் தொங்கிய படி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்