பஸ் வசதி வேண்டும்

Update: 2022-09-19 15:14 GMT
அரியலூர் மாவட்டம், காசான்கோட்டை, சுத்தமல்லி, ஸ்ரீபுரந்தான் வழியாக அரியலூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதனால் மாணவ-மாணவிகள், கூலி தொழிலாளிகள் அதனை பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த பல மாதங்களாக அரசு பஸ் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கும்பகோணத்தில் இருந்து அரியலூர் வரை மேற்கண்ட பகுதி வழியாக அரசு பஸ் தினமும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்