நாகை பழைய பஸ்நிலையத்தில் இருந்து நாகை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாகையை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் இங்குள்ள கல்வி நிலையங்களிலுக்கு பஸ்சில் தான் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ்நிலையத்தில் போதிய இருக்கை வசதி இல்லை. இதனால் மாலை நேரங்களில் பஸ்நிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோர் நீண்ட நேரம் நின்று கொண்டே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெண்கள், முதியவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் இருக்கைகள் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.