கோவை சிறுவாணி சாலை தென்கரை, சென்னனூர் பகுதிகளுக்கு அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படுவதில்லை. குறிப்பாக எஸ்4 என்ற எண் கொண்ட ஒரே ஒரு அரசு பஸ் மட்டும் இயக்கப்படுகிறது. இதில் அதிகஅளவில் பயணிகள் இருப்பதால் கூட்டநெரிசலில் மாணவிகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தென்கரை, சென்னனூர் பகுதிகளுக்கு முறையாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.