பழனி நகரின் முக்கிய சாலைகளான திண்டுக்கல் ரோடு, உடுமலை ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் காலை, மாலை வேளையில் மாடுகள் உலா வருகின்றன. சில நேரங்களில் அவை சாலைகளில் படுத்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதுடன், அவையும் அடிபடுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.