ஊட்டி கமர்சியல் சாலையில் காபி ஹவுஸ் பகுதியில் இருந்து மணிக்கூண்டு வழியாக பஸ் நிலையம் செல்லும் பாதை ஒரு வழி பாதையாக உள்ளது. ஆனால் அந்த வழியில் எதிர்ப்புறமாக சில நேரங்களில் வாகனங்கள் வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விதிகளை மீறி எதிர்ப்புறமாக வாகனங்களில் வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.