நாகை நகராட்சியில் பல்வேறு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. விநாயகர் சதுர்த்தியையொட்டி அந்த வேகத்தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. அதிக போக்குவரத்து மிக்க சாலை என்பதால் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாகை நகராட்சி பகுதிகளில் புதிய வேகத்தடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.