வேகமாக செல்லும் கனரக வாகனங்கள்

Update: 2022-09-16 14:53 GMT

கோட்டூர்-கொடியக்கரை சாலையில் கோட்டூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சைக்கிள், மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து அதிகளவில் காணப்படும். ஆனால் இந்த சாலையில் ஒரு சில கனரக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி