நன்னிலம் தாலுகா பேரளத்தில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தின் வழியாக ஏராளமான பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. ஆனால் விரைவு ரெயில்கள் இங்கு நிற்பதில்லை. இதனால் சென்னை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேரளம் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.