கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் நடைபாதையில் மின்மாற்றி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் சுற்றி புதர் செடிகள் வளர்ந்துள்ளதால், விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் காணப்படுகிறது. எனவே மின்மாற்றியை இடம் மாற்றிவிட்டு, புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.