கிருஷ்ணகிரியில் சுங்கச்சாவடி அருகில் தினமும் 30-க்கும் மேற்பட்ட லாரிகள் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த லாரிகளால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் விபத்துகளில் சிக்குகிறார்கள். குறிப்பாக கிருஷ்ணகிரி நகருக்குள் வரக்கூடிய பகுதியில் சுங்கச்சாவடியில் சாலையோரத்தில் அதிகமாக லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. எனவே போக்குவரத்து போலீசார் அந்த பகுதிகளை கண்காணித்து லாரிகளை சாலையோரத்தில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.