பஸ் வசதி தேவை

Update: 2022-09-10 14:11 GMT

சிதம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்கள் ஒன்று கூட இயக்கப்படவில்லை. இதனால் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்கள் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோ மற்றும் கார்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்க சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு நகர பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி