பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-09 12:28 GMT
நாகை காடம்பாடி அரப்ஷா தர்கா அருகே உள்ள பஸ் நிறுத்தம் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் பஸ் நிறுத்த கட்டிடத்தில் உள்ள இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதன்காரணமாக பயணிகள் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பஸ் நிறுத்த கட்டிடத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. அதுமட்டுமின்றி சிமெண்டு காரைகள் பெயர்ந்து பயணிகள் மீது விழுந்துவிடும் சூழல் உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்