சிவகங்கை நகரில் உள்ள கல்லூரிகளில் படிக்க சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் வருகின்றனர். அதே போல தினமும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பல்வேறு வேலைகளுக்காக சிவகங்கைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். எனவே, காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.