பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-09-08 14:08 GMT

அந்தியூரில் இருந்து ஒலகடம், குட்டமேடு வழியாக மும்மிரெட்டிபாளையம், காௌந்தபாளையம் வரை மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதில் அந்தியூர், பவானி பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட, கல்லூரி மாணவ-மாணவிகள், கூலி தொழிலாளர்கள் சென்று வந்தனர். ஆனால் கொரோனா 2-ம் அலைக்கு பிறகு இந்த பஸ் இயக்கப்படவில்லை. எனவே அந்தியூர்-பவானி சென்றுவர அரசு டவுன் பஸ் ஒன்றை காலை, மாலை வேளைகளில் இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

மேலும் செய்திகள்