போக்குவரத்து விதிகளை மீறும் கனரக வாகனங்கள்

Update: 2022-09-08 11:47 GMT

திருவாரூர் நகரில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. உலக பிரசித்தி பெற்ற தியாகராஜர்கோவிலும் இங்கு உள்ளது. இதனால் எப்போதும் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் திருவாரூர் நகரில் சாலைகளில் செல்லும் கனரக வாகனங்கள் அதிக வேகத்துடன் சென்று வருகின்றன. மேலும் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் ஒரு வித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்