கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் மற்றும் மார்க்கெட் திடலில் இருந்து போக்குவரத்து போலீஸ் நிலையம் வழியாக பஸ் நிலையத்தை இணைக்கும் 2 சாலைகளிலும் இருசக்கர வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்த சாலையில் பள்ளி குழந்தைகள் அதிகம் நடந்து செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே இந்த சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றவோ அல்லது வேகத்தடை அமைக்கவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.