வாகனஓட்டிகளை துரத்தும் நாய்கள்

Update: 2022-09-05 12:02 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிக அளவில் காணப்படும். இந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் சுற்றி திரிகின்றன. நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி செல்கிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிலரை கடித்து விடுகின்றன. சாலையின் குறுக்கே நாய்கள் ஓடுவதால் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்