போக்குவரத்து விதிமீறல்

Update: 2022-09-03 12:21 GMT

நாகை - நாகூர் சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டஅதிகளவில்  ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இவற்றை  மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ-மாணவிகள்  பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் பெரும்பாலான ஷேர் ஆட்டோக்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. அதிவேகமாக செல்வது, அதிகமான ஆட்களை ஏற்றிக்கொண்டு செல்வது என போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் இயங்கும் ஷேர் ஆட்டோக்கள் விதிமுறைகளை பின்பற்றி இயக்கப்பட நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்