ஊட்டியில் ஏ.டி.சி. பஸ் நிலையத்தில் இருந்து பிரதான பஸ் நிலையம் செல்லும் சாலையில் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் பாதசாரிகள் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக வாகன நிறுத்தமிடம் ஏற்படுத்த வேண்டும். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.