கோத்தகிரி காந்தி மைதான புயல் நிவாரண கூடம் அருகே சாலையோரத்தில் வரிசையாக நாள் முழுவதும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அந்த சாலை வழியாக கோர்ட்டு மற்றும் தாசில்தார் அலுவலகம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்கின்றன. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.