போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-30 14:34 GMT

நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஏழைப்பிள்ளையார் கோவில் வரை மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன. தற்போது ஏழைப்பிள்ளையார் கோவில் தெருவில் பணிகள் நடந்து வருகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நடந்து வரும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்