தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-30 14:21 GMT
விழுப்புரம் 4 முனை சந்திப்பு அருகில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை அங்குள்ள சென்னை திருச்சி -தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக நிறுத்துவதால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு , விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்