பயணிகள் நிழற்குடைகள் சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-30 14:04 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா லெட்சுமாங்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில், பூதமங்கலம் பஸ் நிறுத்தம், பனங்காட்டாங்குடி பஸ் நிறுத்தம், கீழபனங்காட்டாங்குடி பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்ப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் முறையான பராமரிப்பின்றி காணப்படுகின்றன. இதன்காணரமாக பயணிகள் நிழற்குடைகளில் இருக்கைகள் சேதடைந்துள்ளன. மேலும், பயணிகள் பஸ்சுக்காக நின்றபடி காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், நிழற்குடை கட்டிடங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்